ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. ஆண்டாள் கோவிலில் இருந்து ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். முன்னதாக ஆண்டாள் ெரங்கமன்னார் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கந்தாடை தெருவில் நடைபெற்ற ராமநவமி விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ராஜா கோபால பட்டர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.