ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணைக் குழு அத்துமீறுவதாக பரபரப்பு புகார்...!

ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் விசாரணைக் குழு அத்துமீறுவதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-13 03:09 GMT

சென்னை,

ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக் குழுவினர், விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்துவதாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ராமஜெயம் கொலை வழக்கை எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக அழைத்து செல்லும் நபர்களை துன்புறுத்துவதாக, சிறை கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.

அதில், இந்த குழு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணித்து மனித உரிமை மீறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  


Full View



Tags:    

மேலும் செய்திகள்