ராமஜெயம் கொலை தொடர்பான வழக்கு தள்ளிவைப்பு; ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-11-21 14:20 GMT

சென்னை,

தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சிக்கு சென்றபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., மற்றும் சி.பி.ஐ., விசாரணை செய்தும் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து இந்த வழக்கை மீண்டும் தமிழ்நாடு போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், சி.பி..ஐ-., துணை சூப்பிரண்டு ரவி ஆகியோர் ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணை டிசம்பர் 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்,

Tags:    

மேலும் செய்திகள்