ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை; திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

Update: 2023-04-22 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

ரம்ஜான் சிறப்பு தொழுகை

தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த சிறப்பு தொழுகை தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் இமாம் அப்துல் அலிம் தலைமையில் நடந்தது. உலக அமைதி, போரில்லா உலகம், கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் இருக்க வேண்டும் என ஏராளமான இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழித்து வளரவும் இமாம் சதக்கத்துல்லா சிறப்பு துவா செய்தார்.

தொழுகைக்குப் பிறகு தங்களது நண்பர்களை கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதில் பள்ளிவாசல் தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிப்பூர் ரகுமான், இமாம் ஷேக் உஸ்மான், நிர்வாக சபை தலைவர் மீராசா, துணைத் தலைவர் ரகுமான், செயலாளர் சாகுல் சிராஜ், பொருளாளர் செய்யது இப்ராஹிம் மூஸா, பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் முகமது உலைஸ் அப்துல்லா செரிப், ஜூபைர், பீர் முகமது அசிம், பள்ளிவாசல் இமாம் ஷேக் உஸ்மான், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏ.கே. மைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி- கயத்தாறு

கோவில்பட்டி முகம்மது சாலிஹாபுரம் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் சார்பில் நேற்று காலையில் ஈத்கா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை பள்ளிவாசல் மவுலவி ஷேக் மீரான் தலைமையில் நடந்தது. தொழுகையில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் தலைவர் சையத் மஹபுல்பாட்ஷா, துணை தலைவர் முஹமது உசேன், துணைச் செயலாளர் பீர் மைதீன், பொருளாளர் சேக் மீரான் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கயத்தாறில் ரம்ஜான் தொழுகையை முன்னிட்டு கயத்தாறு பள்ளிவாசலில் இருந்து அனைவரும் பேரணியாக மதுரை மெயின் ரோட்டில் இருக்கும் ஈத்கா திடலுக்கு சென்றனர். அங்கு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் கே.எம்.பீர்மைதீன் தலைமையில் ஹாஜி முகமதுகனிப் முன்னிலையில் தொழுகை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொருளாளர் ஜாகீர் உசேன், முன்னாள் ஜமாத் தலைவர் காதர் முகைதீன், துணை தலைவர் அப்துல்வாஹீத் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

உடன்குடி- விளாத்திகுளம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் உடன்குடி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள திடலில் அமைப்பின் தலைவர் தவுலத்துல்லாஹ் தலைமையில் செயலர் குத்புதீன், பொருளாளர் அர்ஷிக்ரகுமான், துணைத் தலைவர் இப்ராஹிம் முன்னிலையில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஹசன் சிறப்பு ரம்ஜான் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் உடன்குடியில் சிதம்பர தெரு, பெரிய தெரு, புது மனை புதுத்தெரு, முகைதீன் புதுத்தெரு புதுமனை, சுல்தான்புரம், கூளத்தெரு, பரமன்குறிச்சி சீருடையாபுரம், மெய்யூர் அருகே முகைதீன்பட்டினம் உட்பட அனைத்து முஸ்லிம் தெருக்களில் உள்ள பள்ளிவாசலிலும் சிறப்பு ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளாத்திகுளத்தில் அமைந்துள்ள ஜூம்ஆ குத்பா பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பலர் மகிழ்ச்சியாக ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டு, ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்