தரைகீழ் பாலங்களில் குளமாக தேங்கி நிற்கும் மழைநீர்

தரைகீழ் பாலங்களில் குளமாக தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-10-21 18:45 GMT

விருதுநகர், அக்.22-

விருதுநகர் பகுதியில் ெரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள தரைகீழ் பாலங்களில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தரைகீழ்பாலம்

தென்னக ெரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட பகுதிகளில் ெரயில் பாதையை கடந்து செல்லும் வகையில் ெரயில்வே மேம்பாலம் மற்றும் தரைகீழ்பாலம் அமைப்பதை நடைமுறையாக கொண்டுள்ளது. அந்த வகையில் விருதுநகரில் ராமமூர்த்தி ரோடு மற்றும் அருப்புக்கோட்டை ரோட்டில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்று காமராஜர் பைபாஸ் ரோடு மற்றும் கூரைக்குண்டு ரோடு ஆகிய பகுதிகளில் தரைகீழ் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தாதம்பட்டி ரோடு உள்ளிட்ட வேறு சில பகுதிகளிலும் தரைகீழ் பாலம் அமைக்க வேண்டும் என்று கோரப்பட்டு வரும் நிலையில் அவை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

விபத்து அபாயம்

இந்தநிலையில் மழைக்காலங்களில் பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும்நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தை கடந்து செல்ல மிகுந்த சிரமப்படும் நிலையில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே இது குறித்து பலமுறை ரெயில்வே நிர்வாகத்திடமும், உள்ளாட்சி அமைப்புகளிடமும் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ெரயில் பாதையை கடந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டு கூட விடக்கூடாது என்பதற்காகத்தான் தரைகீழ் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தரையில் பாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே தரைகீழ் பாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க ெரயில்வே நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்