மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி
நீடாமங்கலம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நடக்கிறது
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் பேரூராட்சியில் மழை நீர் வடிகால் தூர்ந்து கிடந்தது. இதனால் மழை பெய்யும் போது சாலைகளில் வடிகால் கழிவு நீரும், மழைநீரும் கலந்து ஓடி தேங்கியது. இது குறித்து பொதுமக்கள், பேரூராட்சி தலைவர் ராமராஜ் மற்றும் செயல் அலுவலர் பரமேஸ்வரி ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் பேரில் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் உடனடி நடவடிக்கை எடுத்து தூய்மை பணி மேற்பார்வையாளர் அசோகன் மேற்பார்வையில் நீடாமங்கலம் பேரூராட்சி மேல ராஜவீதி, மேற்குபுறம் மழைநீர் வடிகாலில் குப்பைகளால் தூர்ந்துள்ள இடங்களை பொக்லின் எந்திரம் மற்றும் தூய்மை பணியாளர்கள் உதவியுடன் சுத்தம் செய்து தூர்வாரும் பணி நடந்து வருகிறது.