சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

கூத்தாநல்லூர் அருகே சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-18 19:00 GMT

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலத்த மழை

கூத்தாநல்லூர் அருகே உள்ள, ஓகைப்பேரையூரில் சாலையையொட்டி கொல்லன் குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைக்கவோ, வெளியேற்றவோ பல ஆண்டுகளாக வாய்க்கால் வசதிகள் இல்லை. இதனால் இந்த குளத்தில் மழைநீர் மட்டுமே தேங்கி நிற்கிறது.இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்ததால், ஓகைப்பேரையூரில் உள்ள கொல்லன் குளத்தில் அதிகளவில் மழை தண்ணீர் தேங்கி, சாலையிலும் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் நிரம்பி வழிந்து நிற்கிறது.

கொசு உற்பத்தி

இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக, மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் கீழே விழுந்து தண்ணீரில் சிக்கி காயம் அடைகிறார்கள். மேலும், அங்கு வீடுகளில் குடியிருப்பவர்களும் கடைவீதி மற்றும் பிற இடங்களுக்கு சென்று வரும் போது, சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து சென்று வருவதில் சிரமம் அடைகின்றனர்.இந்த தண்ணீரில் மாசு படர்ந்து உள்ளதால் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, மீண்டும் மழை பெய்ய தொடங்கும் முன்பு சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்