சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலை பரவலாக மழை பெய்தது. எழும்பூர், சென்னை சென்டிரல், புரசைவாக்கம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், தியாகராய நகர், பூவிருந்தவல்லி, போரூர், மாங்காடு, குமணன்சாவடி, வேளச்சேரி, நங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி உள்பட நகரின் பல்வேறு பகுதிகள் மாலை 6.30 மணியளவில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.