மணல்மேடு பகுதியில் 10 செ.மீ. மழை
மணல்மேடு பகுதியில் 10 செ.மீ. மழை பதிவானது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு 2 மணிவரை நீடித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மணல்மேடு பகுதியில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நேற்று மழை இல்லாததால் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கியது.