மொடக்குறிச்சி பகுதியில் விடிய விடிய பலத்த மழை; கோவிலிலை சூழ்ந்த வெள்ளம்
மொடக்குறிச்சி பகுதியில் விடிய விடிய பலத்த மழை; கோவிலிலை சூழ்ந்த வெள்ளம்;
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அவல்பூந்துறை, எழுமாத்தூர், நஞ்சை ஊத்துக்குளி, விளக்கேத்தி, எல்லக்கடை, கஸ்பாபேட்டை கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தொடங்கி விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக முகாசி அனுமன்பள்ளி தொடங்கி ஊஞ்சலூர் அருகே காவிரியாற்றில் கலக்கும் குரங்கன்ஓடை என்ற அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
அதுமட்டுமின்றி மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறையில் உள்ள கரியகாளியம்மன் கோவில் முன்பகுதியில் வெள்ளம் தேங்கி நின்றது. பொங்கல் வைப்பதற்காக நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். முழங்கால் அளவு தேங்கிய மழை நீரானது இரவு வரை வடியாமல் இருந்தது.