மயிலாடுதுறையில் இன்று மாலை திடீரென மேகமூட்டத்துடன் காற்று வீசியது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. தொடர்ந்து இரவு வரை சாரல் மழை நீடித்தது. இதேபோல மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.