ரெயில் நிலையத்தை கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் முற்றுகை
கோவில்பட்டி ரெயில் நிலையத்தை கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி (கிழக்கு):
வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக ெரயில் நிலைய அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், நிர்வாகிகள் சம்பத்குமார், நாம் தமிழர் கட்சி ரவிக்குமார், மருத மாரியப்பன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை அமிர்தராஜ், ஜாகிர் உசேன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆவல்நத்தம் லட்சுமணன், விடுதலை சிறுத்தை கட்சி பிரபாகரன், மாடசாமி, ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், கலை இலக்கிய பெருமன்றம் ஜெயா, காங்கிரஸ் அருள்தாஸ், ராஜசேகரன், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், பாண்டியனார் மக்கள் இயக்கம் சீனிராஜ், ஜோயல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோரும் மனு கொடுத்தனர்.