ரெயில்வே அதிகாரி விஷம் குடித்து தற்கொலை
பாபநாசம் விடுதியில் ரெயில்வே அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமசிங்கபுரம்:
திண்டுக்கல் நத்தம் ரோடு ஆர்.வி.எஸ்.ரெசிடென்ஸி பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 49). இவர் ெரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு வந்தார். அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ராமகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.