ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரசுக்கு பலமாக இருக்கும் - கனிமொழி எம்.பி

ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரசுக்கு பலமாக இருக்கும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-24 16:11 GMT

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழக அரசு ரூ.1.5 கோடி செலவில் மறைந்த கரிசல் பூமி எழுத்தாளர் கி.ராஜ நாராயணனுக்கு நினைவரங்கம், நூலகம் மற்றும் அவரது சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணிகளை இன்று மாலை கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை வழங்கி வருகிறது. சாகித்திய அகாடமி உள்ளிட்ட விருதுகள் வாங்கிய எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். எழுத்தாளர்களுக்கும், தமிழுக்கும் பல்வேறு திட்டங்களை தினமும் அரசு அறிவித்து கொண்டுள்ளது.

ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரசுக்கு பலமாக இருக்கும். அதற்காகத்தான் அவர் நடைபயணத்தை மேற் கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்