மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: நண்பர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது

மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நண்பர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-25 20:34 GMT


மதுரை பீ.பி.குளம் வைகை தெரு மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 44). இவருடைய நண்பர் கிருஷ்ணாபுரம் காலனி விநாயகர் தெரு சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (55). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் பீ.பி.குளம் முல்லைநகரில் உள்ள மதுக்கடை அருகே நின்றுகொண்டிருந்தனர். அப்போது பால்ராஜ் மது வாங்குவதற்கு ரஞ்சித் குமாரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பால்ராஜ். மதுக்கடை அருகே ஓட்டலில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து ரஞ்சித் குமார் மீது ஊற்றினார். இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்