ராதாகல்யாண மகோத்சவம்

ராதாகல்யாண மகோத்சவம் நடந்தது.

Update: 2023-02-13 18:45 GMT

நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ராதாகல்யாண மகோத்சவம் 4 நாட்கள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கணபதி யாகம், சகஸ்ரநாம அர்ச்சனை, பாகவதர் குழுவினரின் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் ஆஞ்சநேய உற்சவம், உஞ்சவிருத்தி மற்றும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்தன. உற்சவத்தின் 4 நாட்களும் ராதா, ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடந்தன. மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்