டீக்கடையில் ரகளை; 3 பேர் கைது

திண்டுக்கல்லில் டீக்கடையில் ரகளை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-13 18:45 GMT

திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு நேற்று முன்தினம் இரவு 3 வாலிபர்கள் சென்றனர். மேலும் பணம் கொடுக்காமல் சிகரெட் கேட்டு பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் ரகளையில் ஈடுபட்டது சவேரியார்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 24), சகாயராஜா (23), அரண்மனைகுளம் பகுதியை சேர்ந்த யோகராஜா (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்