திருப்பத்தூரில் மாட்டு வண்டி பந்தயம்

திருப்பத்தூரில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.;

Update:2022-11-28 23:33 IST

திருப்பத்தூர், 

திருப்பத்தூரில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

65 வண்டிகள்

திருப்பத்தூரில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்-திண்டுக்கல் சாலையில் நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 65 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை மாங்குடி முருகன் மற்றும் பரளி சித்தார்த் வண்டியும், 3-வது பரிசை எட்டியத்தளி வீரமுனியாண்டவர் மற்றும் பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும் பெற்றன.

சின்னமாட்டு வண்டி

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 46 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றன. முதல் பிரிவில் முதல் பரிசை கண்டவராயன்பட்டி சீமான்முரசு வண்டியும், 2-வது பரிசை பரவை சோனைமுத்து வண்டியும், 3-வது பரிசை திருப்பத்தூர் ரவிச்சந்திரன் மற்றும் அவனியாபுரம் மோகன் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை வல்லாளப்பட்டி கர்க்காத்தா வண்டி மற்றும் அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகனி மற்றும் கண்டவராயன்பட்டி சீமான் முரசு வண்டியும், 3-வது பரிசை வலையன்வயல் ஆர்.ஆர்.கிரசர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்