வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தொண்டியில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-16 18:45 GMT

தொண்டி, 

தொண்டி செய்யது முகமது அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பிராணிகள் நலன் மற்றும் வெறி நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை தாங்கினார். ஆசிரியர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். இதில் உதவி இயக்குனர் நேரு குமார், கால்நடை டாக்டர்கள் பெரியண்ணன், சவுந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு மற்றும் பிராணிகள் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இதுகுறித்த துண்டு பிரசுரங்களையும் மாணவர்களுக்கு வழங்கினர். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் காளிராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்