வெறிநோய் தடுப்பு ஊசி முகாம்

வெறிநோய் தடுப்பு ஊசி முகாம்

Update: 2023-01-21 10:46 GMT

பல்லடம்

திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி முகாம் பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திருப்பூர் கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் ராமசாமி தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் (பொறுப்பு) வெங்கடேசன், நோய் புலனாய்வு உதவி இயக்குனர் கவுசல்யா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் கால்நடை மருத்துவர் உமாசங்கர் வரவேற்றார்.

இந்த முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நாய், பூனை உள்பட வளர்ப்பு பிராணிகளுக்கு, வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் அவைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், இலவசமாக வழங்கப்பட்டன. இந்த முகாமில் பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி, நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜசேகர், ஈஸ்வரமூர்த்தி, வசந்தாமணி தங்கவேல், தண்டபாணி, ம.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், பல்லடம் அரசு மருத்துவர் ரமேஷ் குமார், மற்றும் கால்நடை மருத்துவர் நடராஜன், மற்றும் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்