தேசிய மாணவிகள் படை வினாடி-வினா போட்டி

தேசிய மாணவிகள் படை வினாடி-வினா போட்டி நடந்தது.;

Update:2023-03-20 01:43 IST

தேசிய மாணவிகள் படைக்கான ஜி-20 வினாடி -வினா போட்டி தேர்வு 3-வது தமிழ்நாடு மாணவிகள் படை அணி சார்பில் பாளையங்கோட்டை சாராள்தக்கர் கல்லூரியில் நடைபெற்றது. தலைமை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் டி.எஸ்.சாமந்த், நிர்வாக அதிகாரி மேஜர் மஞ்சு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த 50 மாணவிகள் கலந்து கொண்டனர்.

பொறுப்பாளர் லெப்டினன்ட் ஏஞ்சல் சரல்ரோஸ், பொறுப்பாளர்கள் கவிதா, பகவதி அம்மாள் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தினார்கள். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்