ஆண்டாள் கோவிலில் புஷ்பயாகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புஷ்பயாகம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்று முடிந்ததை யொட்டி ஆண்டாள், ெரங்கமன்னார் மூலஸ்தானத்திற்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு ஆண்டாள், ெரங்கமன்னாருக்கு 108 வகையான மலர்களால் புஷ்பயாக நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் 108 வகையான மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.