லெட்சுமாங்குடி உத்திராபதீஸ்வரர் கோவில் புஷ்ப பல்லக்கு திருவிழா

லெட்சுமாங்குடி உத்திராபதீஸ்வரர் கோவில் புஷ்ப பல்லக்கு திருவிழா

Update: 2023-04-22 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி மரக்கடை உத்திராபதீஸ்வரர் கோவில் புஷ்ப பல்லக்கு திருவிழா நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு அபிசேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து அன்று காலை பிச்சைக்கு எழுந்தருளிய சாமி வீடு, வீடாக சென்று அரிசி மற்றும் தானியங்கள் பெறும் காட்சியும், தொடர்ந்து அமுதுபடையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உத்திராபதீஸ்வரர், வாண வேடிக்கைகள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அமர்ந்து வீதி உலா காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி லெட்சுமாங்குடி எஸ்.எம்.டி.ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. இதில் லெட்சுமாங்குடி சிவலிங்கம் நாடார் அன்ட் சன் செல்வி மெட்டல் ஸ்டோர், ஸ்ரீ ஜெயமணி ரெஜி ஜுவல்லரி, ஸ்ரீகிருஷ்ணர் காபி அன்ட் மளிகை உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்