தூய்மையே சேவை இயக்கம்

திருவாரூரில் குப்பையில்லா இந்தியா என்ற இலக்கினை அடைய தூய்மையே சேவை இயக்கத்தை கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-16 18:45 GMT


திருவாரூரில் குப்பையில்லா இந்தியா என்ற இலக்கினை அடைய தூய்மையே சேவை இயக்கத்தை கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூய்மையே சேவை இயக்கம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக குப்பையில்லா இந்தியா என்ற இலக்கினை அடைய தூய்மையே சேவை இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மை பணி நடைபெறுவதை பார்வையிட்டார்.அப்போது கலெக்டர் கூறியதாவது:-

குப்பையில்லா இந்தியா இலக்கு

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதியில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக குப்பையில்லா இந்தியா என்ற இலக்கினை அடைய தூய்மையே சேவை இயக்கம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை 2 வார விழாவாக கொண்டாட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், தூய்மையே சேவை இயக்கத்தினை ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பள்ளிகல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம், தூய்மை காவலர்கள், சுகாதார ஊக்குவிப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என அனைவரும் ஒன்றினைந்து இந்த இயக்கத்தினை மக்கள் இயக்கமாக செயல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குப்பைகளை அகற்றிய கலெக்டர்

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வடிவேல், திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தூய்மை பாரத இயக்கம்) அன்பரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஊராட்சி செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி ஒன்றியம் நெடுவாக்கோட்டை ஊராட்சியில் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் காளியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டது. மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, திட்ட இயக்குனர் சந்திரா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சவுந்தர்யா ஆகியோர் குளங்களில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றி பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, தாசில்தார் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்