ஊராளிபட்டியில் மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா

நத்தம் அருகே ஊராளிபட்டியில் மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

Update: 2023-06-02 21:00 GMT

நத்தம் அருகே ஊராளிபட்டியில் பொன் அய்யனார், கருப்பசாமி, சிய்யப்பார் ஆகிய சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் மழை வேண்டி நேற்று புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த மாதம் 31-ந்தேதி பொங்கல் குடை, பூஜை பொருட்கள் அடங்கிய பெட்டகம், பொன் அய்யனார் கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சியும், மாலையில் பொங்கல் வைத்தலும், இரவு கருப்பசாமி மின் அலங்காரத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் (புரவி) வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக ஊர்மந்தைக்கு எடுத்து வரப்பட்டு, கண் திறக்கப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள சிய்யப்பார், அய்யனார், கருப்பசாமி ஆகிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை சிய்யப்பார், அய்யனார், கருப்பசாமி உள்பட 21 சுவாமிகள் மற்றும் குதிரை, காளை என புரவிகளை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்மந்தையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், கோவிலில் நிறைவடைந்தது. அங்கு சுவாமி சிலைகள் இருப்பிடத்தில் வைக்கப்பட்டது.

இந்த திருவிழாவில் ஊராளிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்