பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-08-24 20:34 GMT


மதுரை பெத்தானியாபுரம் சின்னசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர்கள் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன். இவர்கள் 3 பேரும் சேர்ந்து வி.எல்.சி.அக்ரோ டெக் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை தொடங்கினார்கள். அதில் பல கவர்ச்சிகரமான திட்டத்தினை தொடங்கி அதில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி பொதுமக்கள் பலர் லட்சக்கணக்கான ரூபாயை அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்த நிலையில் பல பேரின் தவணை முதிர்வு காலம் முடிந்த நிலையிலும் அந்த நிதி நிறுவனம் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தது. இது குறித்து நிதி நிறுவனத்திடம் கேட்ட போது உரிய பதில் இல்லை.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் தங்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங் களுடன் மதுரை தபால் தந்தி நகர் விரிவாக்கம், பார்க் டவுன் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி புகார் மனு அளிக்கு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்