தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை

தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-01-23 22:37 GMT

தம்மம்பட்டி:

தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் செந்தாரப்பட்டி பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஆத்துர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஹரிசங்கரியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

2011-ம் ஆண்டு முதல் கோவில் தேர் திருவிழாவில் ஊர்வலம் வருவது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஐகோர்ட்டு நீதிபதி அனைத்து சமுதாயத்தினரை சேர்ந்தவர்களும் தலா 4 பேர் வீதம் ஆஜராகும்படி கூறி இருந்தனர். அதன்படி கடந்த 19-ந் தேதி 84 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட ஒருவரை சிலர் ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து செந்தாரப்பட்டியில் அமைதி ஏற்பட செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி, அந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்