பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

வடகாடு அருகே கோவில் திருவிழாவில் முன்னுரிமை அளிக்கக்கோரி ஒரு தரப்பினை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2022-05-29 17:54 GMT

வடகாடு:

கோவில் திருவிழாவில் முன்னுரிமை

வடகாடு அருகே மாங்காட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி தேரோட்ட திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான காப்புக்கட்டு நிகழ்ச்சியின்போது தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அதே கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினை சேர்ந்த பொதுமக்கள் வடகாடு பேப்பர் மில் ஆலங்குடி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்டவர்களை ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சாலை மறியலால் ஆலங்குடி-பட்டுக்கோட்டை சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்