விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் - போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விடுமுறைகளை தொடர்ந்து இன்று ஏராளமான மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
அவ்வாறு சென்னைக்கு வரும் பொதுமக்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் சென்னை வந்ததும் பல்வேறு பகுதிகளுக்கும் செல்வதற்காக நாளை அதிகாலையில் 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.