காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, கட்டவாக்கம் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-13 09:21 GMT

காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் ஆகியோர் முன்னிலை விகித்தனர். மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், பட்டா நகல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ஊனமுற்றோர் நான்கு சக்கர வாகனம், இலவச தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 73 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 82 பயனாளிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ரூ. 77 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை விரிவாக கிராம மக்களுக்கு எடுத்து கூறி சிறப்புரையாற்றினார்.

மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடர்ந்து நடைபெறுவதாகவும் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரங்குக்கு சென்று பார்வையிட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொண்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ரம்யா, வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், ஒன்றிய குழு துணைதலைவர் சேகர், வாலாஜாபாத் தாசில்தார் சுபப்பிரியா, கட்டவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் அஞ்சலம் அருள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்