மக்கள் தொடர்பு முகாம்

புத்தூரில் மக்கள் தொடர்பு முகாம்

Update: 2023-07-18 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசன் சுப்பராய அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கூத்தியம் பேட்டை, புத்தூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட மனுக்களை நேரில் வழங்கி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்