குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு

விஜய அச்சம்பாடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-06-12 18:59 GMT

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இட்டமொழி ஊராட்சிக்குட்பட்ட விஜயஅச்சம்பாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் பைப்லைன் மூலம் பொதுமக்களுக்கு கிடைத்து வந்த குடிநீர் கடந்த 40 நாட்களாக வராததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. நேற்று விஜயஅச்சம்பாடு ஊர் பொதுமக்கள் சார்பில் கோவில் தர்மகர்த்தா கோ.முத்துக்கிருஷ்ணன், முன்னாள் தர்மகர்த்தா சுப்பிரமணியன், காங்கிரஸ் நிர்வாகிகள் வெள்ளத்துரை, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி மனு அளித்தனர். உடனே ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து உடனடியாக ரூ.2 லட்சம் வழங்கி கூட்டுக்குடிநீர் பைப்லைனில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார்.

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நேற்று இட்டமொழி அருகே உள்ள வெங்கட்ராயபுரம் கன்னி விநாயகர், அன்னை பராசக்தி, ராமராஜா ரங்கநாயகி கோவில் வருசாபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்