அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு

அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2023-01-31 19:37 GMT

அம்பை:

அம்பை அருகே வாகைகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

அதில் இப்பகுதியைச் சார்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் குடியிருப்பு செல்லும் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தொடர்ந்து அவர்கள் அம்பை தாசில்தார் விஜயாவிடம் கோரிக்கை மனுவை வழங்கி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதில் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்