செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ஆரணி நகரில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.
ஆரணி
ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் 13-வது வார்டுக்கு சம்பந்தப்பட்ட கமண்டல நாக நதி தெருவில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் கே.பி.குமரன் மற்றும் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி ஆகியோரிடம் அந்த பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க நகராட்சி அனுமதிக்க கூடாது என கோரிக்கை மனு வழங்கினார்.
அப்போது நகரமன்ற உறுப்பினர்கள் கு.விநாயகம், சுதா குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.