தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதி விளையாட்டு மைதானத்தில் வேலி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் விளையாட்டு மைதானத்தில் வேலி அமைக்க கூடாது என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2022-08-25 14:17 GMT

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் விளையாட்டு மைதானத்தில் வேலி அமைக்க கூடாது என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கோரிக்கை மனு

தூத்துக்குடி தாளமுத்து நகர் பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் கடந்த 38 ஆண்டுகளாக எங்களுடைய அனுபவத்தில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் முள் காடாக இருந்த அந்த இடத்தை மைதானமாக மாற்றி பராமரித்து வருகிறோம். அதில் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள், சுதந்திர தினம், குடியரசு தினம் என பல்வேறு விழாக்களையும் சாதி, மத பேதமின்றி நடத்தி வருகிறோம்.

அதிகாரம் இல்லை

இந்த நிலத்தை கடந்த 23-ந் தேதி தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் வேலி அமைக்க வந்தனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் தாளமுத்துநகர் போலீசில் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேற்கண்ட நிலம் தூத்துக்குடி மாநகராட்சி பெயரில் பதிவு செய்யப்படவில்லை.

மேலும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமில்லாத மைதானத்தை வேலியிட மாநகராட்சிக்கு எந்த அதிகாரமும் இல்லை.

வழக்குகளை திரும்ப பெற வேண்டும்

இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மாநகராட்சி ஆணையர் எந்தவித அறிவிப்பும் இன்றி, மேற்படி நிலத்தில் வேலியிடுவது கோர்ட்டை அவமதிக்கும் செயல் ஆகும். இந்த நில விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தலையிடக்கூடாது. வேலியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்