பா.ஜனதா மகளிர் அணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மதுரையில் பா.ஜனதா மகளிர் அணி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.;

Update: 2023-06-25 20:33 GMT

மதுரை மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் தெற்கு தொகுதியில் மாரியம்மன் தெப்பக்குளம் மண்டலில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி மீனா இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், மாநில செயலாளர் சூர்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கிளை தலைவர்களுக்கு வெள்ளி மோதிரம் பரிசாக வழங்கினர்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மாநில செயலாளர் சூர்யா பேசுகையில், பிரதமர் மோடி ஆட்சியில் வழங்குகின்ற மாணவர்களுக்கான கல்விக் கடனை தனது முயற்சியின் வாயிலாக வழங்கப்பட்டதாக கம்யூனிஸ்டு எம்.பி. வெங்கடேசன் நாடகமாடி வருகிறார்.தி.மு.க.கூட்டணி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்குவதாக ஏமாற்றி விட்டனர்.

இதைத்தவிர தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. இவர் அவர் பேசினார்.

முன்னதாக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி தலைவர் மீனா இசக்கி ஒருங்கிணைந்து செயல்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்