தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
காட்டுசெல்லூர், வெள்ளையூரில் தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் வெள்ளையூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கிழக்கு ஒன்றிய செயலாளரும், உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத் தலைவருமான வைத்தியநாதன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ப.ராஜவேல், நகர மன்ற தலைவர் கே.திருநாவுக்கரசு, நகர செயலாளர் த.டேனியல்ராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் பிரியா பாண்டியன், அமுதா சாமி பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சட்ட திருத்தக்குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் உமாராணி சண்முகம், ஜெயக்குமார், சக்திவேல், சக்கரவர்த்தி மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நீதிபதி, அருண்ராஜ், ஐஸ்வர்யா, ஒன்றிய நிர்வாகிகள் குருராஜ், பிரகாஷ், சிவசங்கர்,பாலாஜி, பிரபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்டுசெல்லூர்
உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் காட்டுசெல்லூர் கிராமத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜவேல் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர்கள் செல்லையா, ஆசிர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கடலூர் இள.புகழேந்தி கலந்துகொண்டு தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலா, மாவட்ட கவுன்சிலர்கள் பிரியா பாண்டியன், அமுதா, நகர நிர்வாகி ஐஸ்வர்யா, நகர மன்ற உறுப்பினர் செல்வகுமாரி ரமேஷ், வக்கீல் சிவசங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் கணேசன், அலெக்சாண்டர், அஞ்சலை, ராதா மனோகரன், சர்தார், சிவக்குமார், நீதிபதி,கதிரவன், குருராஜ், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுரேஷ் நன்றி கூறினார்.