தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.;
தாயில்பட்டி,
விருதுநகர் தெற்குமாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பாக தி.மு.க. அரசின் 2-வது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாயில்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சுஜாதா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் பதில் தந்துள்ளனர். சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் கேள்வி நேரம், மானிய கோரிக்கையை குறித்து எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்கு நேரம் தருவதில்லை.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கி உள்ளார். அரசு மருத்துவமனைகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டு நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கட்டணமில்லா பஸ்களில் பல லட்சம் மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும் பாராட்டுகின்றன. 2 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகள் செய்த தி.மு.க.விற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய பிரதிநிதி கருப்பசாமி ஆகியோர் வரவேற்றனர். இதில் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் அவைத்தலைவர் திருப்பதி, ஒன்றிய துணை செயலாளர்கள் விவேகானந்தன், முத்துராஜ், பொன்னுராஜ், பொன்னழகு, இளைஞர் அணி நிர்வாகிகள் மகேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கணேசன், மகேந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் சந்தனம் நன்றி கூறினார்.