தலித் விடுதலை இயக்கம், சமநீதி கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

தலித் விடுதலை இயக்கம், சமநீதி கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.;

Update: 2023-10-07 17:59 GMT

 தலித் விடுதலை இயக்கம், சமநீதி கழகம் சார்பில் சனாதனமும் எதிர்ப்பு அரசியலும் விளக்க பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தையில் நடைபெற்றது. இதற்கு சமநீதிக்கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். தலித் விடுதலை இயக்க மாநில தொண்டர் அணி செயலாளர் நிஷோக் ராஜா வரவேற்று பேசினார். தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா கருத்துரை வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சிந்தனைச்செல்வன் கலந்து கொண்டு பேசுகையில், சனாதனத்திற்கு எதிரான அரசியல் என்பது சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதற்கான அரசியல் மட்டுமே. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதற்காகவே சனாதனத்தை எதிர்த்து வருகிறார். நேரடியாக எதிர்க்க முடியாமல், சனாதனம் தர்மம் தற்போது மறைமுகமாக நம்மை நோக்கி வருகிறது, என்றார்.

இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்