பொது சுகாதார நூற்றாண்டு நினைவு ஜோதி
பொது சுகாதார நூற்றாண்டு நினைவு ஜோதியை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நினைவு ஜோதி சென்னையில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக செல்கிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தை வந்தடைந்த ஜோதி நேற்று வேலூருக்கு கொண்டு வரப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் ஜோதியை, மருத்துவதுறையினர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் வழங்கினர். அதனை அவர் பெற்று கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாவட்ட நல கல்வியாளர் நீதிபதிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜோதியை மருத்துவ துறையினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இந்த ஜோதி இன்று (சனிக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.