போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

Update: 2023-07-12 19:39 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்