குடியிருப்பு பகுதியில் மண் எடுத்து வந்த லாரி சிறைபிடிப்பு

திருத்துறைப்பூண்டி அருகே குடியிருப்பு பகுதியில் மண் எடுத்து வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2022-05-24 16:46 GMT

திருத்துறைப்பூண்டி:-

திருத்துறைப்பூண்டி அருகே குடியிருப்பு பகுதியில் மண் எடுத்து வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

லாரி சிறைபிடிப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி ஊராட்சி கீழ குடியிருப்பு பகுதியில் தனியார் இடத்தில் அரசு அனுமதியுடன் மண் எடுப்பதாக கூறப்படுகிறது.

இங்கு மண் எடுப்பதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், குறிப்பிட்ட ஆழத்தை விட கூடுதலாக மண் எடுப்பதால், தண்ணீர் உப்பு நீராக மாறி விவசாயம் பாதிக்கும் என்றும், மண் எடுத்து செல்லும் லாரிகள் அடிக்கடி செல்வதால் சாலைகள் பழுதடைந்து உள்ளதாகவும் கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண் எடுத்து வந்த லாரியை சிறைபிடித்து அதன் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து திருத்துறைப்பூண்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சிறைபிடிக்கப்பட்ட லாரியை பொதுமக்கள் விடுவித்தனர். போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்