அரசு ஆஸ்பத்திரிக்கு படுக்கை, முககவசம் வழங்கல்

தூத்துக்குடி பியர்ல்ஸ் அரிமா சங்கம் சார்பில் அரசு ஆஸ்பத்திரிக்கு படுக்கை, முககவசம் வழங்கப்பட்டது.;

Update:2022-12-10 00:15 IST

தூத்துக்குடி பியர்ல்ஸ் அரிமா சங்கம் சார்பில் சங்கத் தலைவர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன் ஏற்பாட்டில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 2 இரும்பு கட்டில்கள், 11 ஆயிரம் முககவசம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த உபகரணங்களை அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணியிடம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் எஸ்.தர்மராஜ், பொருளாளர் பாஸ்கரன், ஒருங்கிணைப்பாளர் டி.ஏ.தெய்வநாயகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்