வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்

சாம்பவர் வடகரையில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

Update: 2023-06-28 18:45 GMT

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந் தேதி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான இந்த முகாம் தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரை அய்யப்பன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு தென்காசி மாவட்ட வருங்கால வைப்புநிதி அலுவலக ஒருங்கிணைப்பாளர் சதீஷ் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை, சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் தங்களின் பி.எப். சம்பந்தப்பட்ட குறைகளை கூறி அதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் பெற்றனர். மேலும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் முகாம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்த நிறுவன அலுவலக மேற்பார்வையாளர் கணேசன், அலுவலர்கள் ரமேஷ், ராமலிங்கம், செய்யது அலி ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்