அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்

அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்

Update: 2022-06-04 14:24 GMT

திருவாரூர்:

அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் மனு அளித்தனர்.

கோரிக்கை மனு

திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலமுனி சித்தருக்கு ஜென்ம தின குருபூஜை விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் அப்பு வர்மா ஒரு கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

60 வயதுக்கு மேற்பட்ட கிராம பூசாரிகளுக்கு ஒய்வூதியம் வழங்க வேண்டும்.

கிராம கோவில் பூசாரிகளுக்கு நலவாரிய உதவித்தொகை மாதம் ரூ.7,500 வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மாத ஒய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கிராம பூசாரிகளுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.

அரசு வங்கிகள் கடன் உதவி

கிராம கோவில் பூசாரிகள் குடும்பத்தினருக்கு தகுதிக்கு ஏற்றவாறு அரசு வேலை வழங்கி பூசாரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு கிராம கோவிலுக்கும் இலவச கறவை மாடு வழங்க வேண்டும். கிராம பூசாரிகளுக்கு அரசு வங்கிகள் கடன் உதவி வழங்க வேண்டும். அறங்காவலர் குழுவில் கிராம பூசாரிகளையும் இணைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்