இசைக் கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்

இசைக் கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்

Update: 2022-06-08 18:30 GMT

மன்னார்குடி:

இயல், இசை நாடக நடிகர் சங்க செயற்குழு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குப்புசாமி வரவேற்றார். கூட்டத்தில் செயலாளர் ஜோதி மகாலிங்கம், பொருளாளர் பெரமையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நலிவுற்ற கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கியதற்கும், அரசு மற்றும் தனியார் பஸ்களில் இசைக்கருவிகளை சுமை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நாடக, இசை கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். மன்னார்குடி இயல் இசை நாடக நடிகர் சங்கத்திற்கு நகராட்சி நிர்வாகம் கட்டிட வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கவுரவத்தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்