மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

Update: 2023-02-11 12:16 GMT

ஊத்துக்குளி

ஊத்துக்குளி ரயில் நிலைய பகுதியில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய பா.ஜ.க அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பாஜக அரசின் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு ஆதார விலை வழங்க மறுப்பு, உர மானியம் குறைப்பு, விவசாய தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் நிதி குறைப்பு மற்றும் உணவு மானியத்தை இந்த பட்ஜெட்டில் வெட்டியதை கண்டித்தும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.தாலுக்கா செயலாளர் கொளந்தசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுக்கா தலைவர் மணியன், ஒன்றிய செயலாளர் பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரை நிகழ்த்தினார்கள்.பின்பு கண்டன முழக்கம் எழுப்பி மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிக்கப்பட்டது.இப்போராட்டத்தில் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்