கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

செங்கோட்டையில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

Update: 2023-08-28 19:00 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் செங்கோட்டை தாலுகா குழு சார்பில் குடிமனை பட்டா வேண்டி நினைவூட்டும் மனுக்கொடுக்கும் போராட்டம் நடந்தது. செங்கோட்டை தாலுகா பொறுப்பு செயலாளா் அருள்ராஜ் தலைமை தாங்கினார். பொறுப்பு செயலாளா்கள் ஆறுமுகம், சீதையம்மாள், மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாநில செயலாளா் பாஸ்கரன், மாவட்ட பொறுப்பு செயலாளா் காளியப்பன், விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட பொறுப்பு செயலாளா் முத்துசாமி, வட்டார பொறுப்பு செயலாளா் சம்சுதீன், தென்காசி தாலுகா பொறுப்பு செயலாளா் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். ஆர்ப்பாட்டத்தில் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கிளை செயலாளா்கள் ராமையா, குத்தாலிங்கம், கனகராஜ், பிச்சையா, சுப்புலெட்சுமி, சுதா, மாரியம்மாள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்