வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகில் காமராஜர் சிலை முன்பு நெல்லை தெற்கு மாவட்ட தென்மண்டல இளைஞரணி நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நாங்குநேரி சுங்கச்சாவடியில் சுற்று வட்டார 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு இலவச பாஸ் வழங்க வலியுறுத்தியும், சுங்கச்சாவடி நிர்வாகத்தைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், லாரி, வேன், கார், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், நேதாஜி சுபாஷ் சேனை நிறுவன தலைவர் மகாராஜன் கூறுகையில், "அம்பை கோட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரியாக அரசு அமுதா ஐ.ஏ.எஸ் நியமித்திருப்பது கண்துடைப்பு நாடகம். எனவே அவரது விசாரணையை நாங்கள் புறக்கணிப்போம்" என்றார்.