மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-06 22:15 GMT

மேட்டுப்பாளையம்

டெல்லியில் போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜனதா எம்.பி.யை தண்டிக்கக்கோரியும், நீதி வேண்டியும் மேட்டுப்பாளையத்தில் வடக்கு மாவட்ட விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராபியா தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் முகமதுநவுபல், எஸ்.டி.டி.யு. மாவட்ட தலைவர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் சபுராமா வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பேச்சாளர் சேக் அலாவுதீன் கலந்து கொண்டு பேசினார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் முகமது அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர், தொகுதி செயலாளர் காஜா மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் யாஸ்மின் நன்றி கூறினார்.

இதேபோல அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாலுகா செயலாளர் மன்சூர் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. நகர செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சந்திரசேகர், திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், என்.எச்.எப். மாநில செயலாளர் செவ்விளம்பரிதி, ஜெயராம் ஜி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். முடிவில் ராஜ்கமல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்